×

தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறி தவெகவில் இணைந்தது ஏன்?- துரை வைகோ விளக்கம்

 

நிதி பற்றாக்குறை தவெக அரசுக்கு சவாலாக உள்ளது. அதனை சரி செய்யும் முயற்சியில் இந்த அரசு ஈடுபட்டுள்ளதாக மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்பி கூறியுள்ளார்.


புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக MP துரை வைகோ, “என்னைக்கு அ.தி.மு.கவிடம் கூட்டணி வைக்க முயன்றாங்களோ அன்னைக்கே தி.மு.க கூட இருக்க முடியாதுனு வெளில வந்துட்டோம். இன்னைக்கு த.வெ.க லஞ்சம் எதுவும் இல்லாம ஒரு அரசா மாற்றத்தை கொடுக்க முயற்சி பண்ணிட்டு இருக்காங்க. ஏற்கனவே செயல்படுத்தி வரும் திட்டங்களாக இருக்கட்டும், புதிதாக இந்த அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் திட்டங்களாக இருக்கட்டும், மிக சவாலாகவே இருக்கும். நிதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு சில முயற்சிகளை அரசு எடுத்துள்ளது. குறிப்பாக அனைத்து துறைகளிலும் பல வித லீக்கேஜ் உள்ளது. இதை சீர் செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் கூடுதல் வருவாய் அரசுக்கு கிடைக்கும்.

மதவாத அரசியலை எதிர்க்கத்தான் அன்று திமுக கூட்டணியில் சேர்ந்தோம். சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட ஊழலற்ற நிர்வாகம் குறித்து பேசியதால் இன்று நாங்கள் மட்டுமல்ல, பிற கட்சிகளும் தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் இணைந்துள்ளது. நிதி பற்றாக்குறை தவெக அரசுக்கு சவாலாக உள்ளது. அதனை சரி செய்யும் முயற்சியில் இந்த அரசு ஈடுபட்டுள்ளது” என்றார்.