☰
×

பழிவாங்கவே அன்பில் மகேஷ் கைது-துரைமுருகன் 

 

அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டு இருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், "அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டு இருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. ஆளுங்கட்சி எதிர்க்கட்சியை பழிவாங்கும் நோக்கில் செயல்படுகிறது.  வழக்கை சட்டப்படி எதிரக்கொண்டு எங்கள் தரப்பு நியாயத்தை நிரூபிப்போம். எங்கள் பக்கம் நியாயம் இருக்கிறது. அதனை நீதிமன்றத்தில் நிரூபிப்போம். எதிர்க்கட்சியை ஆளுங்கட்சி பழி வாங்குகிறது. இன்றைக்கு சென்னையில் ஓரளவுக்கு வெள்ளம் வடிந்துள்ளது என்றால் அது நாங்கள் செய்து விட்டுப் போன பணிகளால் தான். இவர்கள் ஒரு மண்வெட்டி அளவு மண்ணை கூட எடுக்கவில்லை.

ஒரு பகுதியில் ஒரு இளநீர் கடை நன்றாக ஓடினால், ஆளாளுக்கு அதேபோல் கடை வைக்க நினைப்பது போன்றதுதான் நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வர நினைப்பதும். இதுபோன்ற முயற்சிகள் எதுவும் நிலைக்காது. எல்லோரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது. தவெக ஆட்சியைப் பற்றி ஒற்றை வரியில் சொல்வதானால் 'விளங்காது' என்றுதான் கூற வேண்டும்" என்றார்.