☰
×

டிஎஸ்பிக்களின் பயிற்சி நிறைவு விழா- காவலர்களை கெளரவித்த விஜய்

 

பயிற்சியை நிறைவு செய்த துணைக் காவல் கண்காணிப்பாளர்களுக்கு பதக்கங்களை வழங்கி முதல்வர் விஜய் கௌரவித்தார்.


சென்னை அடுத்த வண்டலூர் ஊனமாஞ்சேரியில் பயிற்சி காவல் துணைக் கண்காணிப்பாளர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு மரியாதையை ஏற்று கோப்பைகள் மற்றும் பதக்கங்கள் வழங்கினார் முதலமைச்சர் விஜய். ஆனிஷ் பிரதீப்பிற்கு  ஒட்டுமொத்த சிறப்பு விருதான முதலமைச்சர் கோப்பை, வீர வாள், தங்க பதக்கத்தையும் முதலமைச்சர் விஜய் வழங்கினார். முன்னதாக 14வது காவல் துணைக் கண்காணிப்பாளர்களின் பயிற்சி நிறைவு விழாவில் பங்கேற்ற முதல்வர் விஜய், வாகனத்தில் வலம் வந்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியில் நடைபெற்ற 14-வது காவல் துணைக் கண்காணிப்பாளர்களுக்கான பயிற்சி நிறைவு விழாவில் முதல்வர் ச. ஜோசப் விஜய், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் டாக்டர். மகேஷ் குமார் அகர்வால், ஐபிஎஸ்., உடன் அணிவகுப்பு ஆய்வு செய்தார்.