×

“உதயநிதியை வரச் சொல்லட்டுமா?” மதுபோதையில் போலீசை ஆபாசமாக மிரட்டிய ஜோடி கைது

 

சென்னை பட்டினப்பாக்கம் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக காரை நிறுத்தி மதுபோதையில் போலீசை ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்த சந்திரமோகன் மற்றும் அவரத் தோழியை போலீசார் கைது செய்தனர்.



சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் காரில் வந்த ஜோடி, மது போதையில் போலீசாரிடம் தகராறு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. சாலையில் நிறுத்தப்பட்ட காரை எடுக்க சொன்ன போலீஸ்காரரை போதையில் இருந்த ஜோடி, ஆபாசமாக பேசினர். “நீங்கள் யார்” என இருவரிடமும் போலீசார் சிலம்பரசன் விசாரிக்கும் போது இருவரும், “என்னை வீடியோ எடுக்கிறீர்களா? இந்த போஸ் போதுமா.. இந்த போஸ் போதுமா?” என கேலி செய்துள்ளனர். மேலும் ”“நான் உதயநிதி ஸ்டாலினை இங்கேயே கூப்பிடுவேன் பாக்குறியா”, “உன்னால் முடிந்ததை பாரு... நான் குடிச்சிதான் இருக்கேன். என்னால காரை எடுக்க முடியாது, உன் அட்ரஸ் எடுத்து காலி பண்ணிடுவேன்” என மிரட்டியுள்ளனர். 


இதுதொடர்பாக வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், மயிலாப்பூரில் விடுதி எடுத்து தங்கியிருந்த இருவரையும் கைது செய்த போலீசார்,  போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட சந்திரமோகன் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.ஆபாசமாக திட்டுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல், சட்டவிரோதமாக தடுத்தல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.