×

மதுபோதையில் கார் ஓட்டி விபத்து.. குழந்தைகள் கண் முன்னே தந்தை பலி..!

 

கேரளம் மாநிலம் திருவனந்தபுரத்தில் மதுபோதையில் காரை ஓட்டிச் சென்றதாக கூறப்படும் நபர், கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 2 குழந்தைகள் உட்பட 4 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.