மதுரையில் இன்று டிரோன்கள் பறக்க தடை..!
Jan 17, 2026, 05:55 IST
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரைக்கு வருகை தர உள்ளார். மதுரை அலங்காநல்லூரில நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்து பார்வையிடுகிறார்.
இதனையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரையில் இன்று டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி மதுரை விமான நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதித்து மதுரை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.