ட்ரோன் லைட் ஷோ... ஜனநாயகன் ரிலீஸையொட்டி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்..!
இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில், தமிழ்நாடு முதலமைச்சரும், நடிகருமான விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்' திரைப்படம் இன்று (ஜூலை 23) உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. விஜய்யின் திரைப்பயணத்தில் இதுவே அவரது கடைசித் திரைப்படம் என்பதால், ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில் 'ஜன நாயகன்' படத்திற்காக இதன் தயாரிப்பு நிறுவனமான 'KVN புரொடக்ஷன்ஸ்' புது விதமான புரொமோஷனை செய்திருக்கிறது. பறக்கும் ட்ரோனில் LED ஸ்க்ரீன் மூலம் படத்தின் வெவ்வேறு போஸ்டர்களை திரையிட்டு அசத்தியிருக்கிறார்கள்.
For the first time ever in cinema…
— KVN Productions (@KvnProductions) July 22, 2026
Witness the Flying LED experience for #JanaNayagan ♥️#JanaNayaganFromTomorrow#JanaNayakuduFromTomorrow#JanNetaFromTomorrow
The Hon'ble Chief Minister @actorvijay @TheKVNofficial @KvnProductions #HVinoth @hegdepooja @anirudhofficial… pic.twitter.com/QyzSyw7hdQ