சிவகாசி அருகே கோர விபத்து : 10 நாட்களுக்கு முன்பு பணியில் சேர்ந்த ஓட்டுநரால் விபத்து..!
சிவகங்கை அருகே அரசுப் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விப்பாது ஏற்பட்டுள்ளது. விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் 10 நாட்களுக்கு முன்பு தான் பணியில் சேர்ந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியானது.
சிவகங்கை மாவட்டம் அருகே பழையனூரில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்று, கீழ ராங்கியம் கிராமத்தின் அருகே எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அலறியடித்த நிலையில், சுமார் 35 பேர் பலத்த காயமடைந்தனர். விபத்து நடந்தவுடன் அருகில் இருந்த கிராம மக்கள் மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
காயமடைந்த 35 பேரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுள் பலத்த காயமடைந்த 16 பேர், தீவிர சிகிச்சை மற்றும் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனைக்கு அவசர அவசரமாக கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் தற்பொழுது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இந்த அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் புதிதாக பணியில் சேர்ந்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அனுபவக் குறைவு காரணமாக, திடீரென பேருந்து அவரது கட்டுப்பாட்டை மீறியதே இந்த விபத்துக்கு மிக முக்கியக் காரணம் என்று சொல்லப்படுகிறது. புதிய ஓட்டுநரின் கவனக்குறைவால் 35 பயணிகள் காயமடைந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து.. அனுபவம் இல்லாத ஓட்டுநர் பேருந்தை இயக்கியதே விபத்திற்கு காரணம் என பயணிகள் குற்றச்சாட்டு..! #Sivagangai #GovernmentBusAccident #Bus #PassengerSafety #PublicTransport #Newstamil24x7 pic.twitter.com/XzNUdGbBx2
— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) May 28, 2026