×

ஓடும் பேருந்தில் மாரடைப்பால் ஓட்டுநர் உயிரிழப்பு! 

 

பழனி அருகே மாட்டுப்பாதையில் தனியார் பேருந்து ஓட்டுநர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். துரித நேரத்தில் செயல்பட்டு நடத்துநர் பேருந்தை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நடத்துனர்,  “என்னால முடியல நெஞ்சு வலிக்கிது விமல்னு... அப்படியே ஸ்டீயரிங்ல இருந்து விழுந்துட்டாரு.. உடனே ஹேண்ட் பிரேக் போட்டு பஸ்ஸ நிறுத்தி பல உயிர்களை காப்பாற்றினேன். ஆனால் ஓட்டுநரை மட்டும் காப்பாற்ற முடியவில்லை” என்றார்.