×

பழங்குடியின மாணவர்களை பேருந்தில் இருந்து தள்ளிவிட்ட ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட்

 

புதுக்கோட்டையில் பழங்குடியின மாணவிகளை பேருந்தில் ஏற்ற மறுத்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டம் ரங்கம்மாள் சத்திரம் அருகே பள்ளிக்குச் சென்ற 10 பழங்குடியின மாணவிகளை கூட்டத்தைக் காரணம் காட்டி, அவர்களை ஓட்டுநர் கீழே இறங்க சொல்லியுள்ளார். அவர்கள் மறுத்ததால் ஓட்டுநர் திடீரெனப் பேருந்துக் கதவைத் திறந்துள்ளார். அதில் பயணம் செய்த எட்டுக்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவிகள் படுகாயமடைந்தனர்.

இச்சம்பவத்துக்கு கண்டனங்கள் வலுத்துவரும் நிலையில், புதுக்கோட்டை அருகே பள்ளி மாணவர்களை, அரசு பேருந்தில் இருந்து தள்ளிவிட்ட விவகாரத்தை போக்குவரத்து துறை மூடி மறைக்கிறது. எமர்ஜென்சி பொத்தானை அழுத்தியதால் பேருந்தின் முன் படிக்கட்டு கதவு திறந்ததாகவும், படியில் நின்ற மாணவ-மாணவிகள் சிலர் நிலைதடுமாறி கீழே விழுந்ததாகவும் போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய பேருந்து ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.