குடிநீர் விநியோகம் - ரூ.340 கோடி ஒதுக்கீடு
Jul 31, 2026, 20:34 IST
குடிநீர் மற்றும் அத்தியாவசிய பணிகளுக்காக ரூ.340 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தென்மேற்குப் பருவமழைப் பொழிவு, குடிநீர் விநியோகம், வேளாண் பயிர் சாகுபடி நிலை குறித்து ஆய்வுசெய்து அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள ரூ.340 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யவும், வாரந்தோறும் ஆய்வுக் கூட்டம் நடத்தி குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் முதல்வர் ஆணையிட்டுள்ளார். நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல், ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறைகள் வாயிலாக நீர் ஆதாரங்களை மேம்படுத்திட ரூ.330 கோடியும், கால்நடை பராமரிப்பு, மீன்வளம், மீனவர் நலத்துறைக்கு ரூ.10 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.