×

பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இருமடங்கு கட்டணம்!

சுங்கச்சாவடிகளில் தானியங்கி சுங்கக் கட்டணம் வசூலிக்கும் பாஸ்ட் டேக் முறை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் வாகன ஓட்டிகள் டிஜிட்டல் முறையில் சுங்கக் கட்டணத்தை செலுத்த முடியும். இதனால் வாகனங்கள் நிற்கும் நேரம் குறையும் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்திருந்தது. இருப்பினும் சிலர் பாஸ்ட் டேக்மூலம் கட்டணம் கட்டினாலும் பலர் இன்னும் பாஸ்ட் டேக்வசதியை தங்கள் வாகனங்களில் செய்துகொள்ளவில்லை. இந்நிலையில் நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு நாளை (பிப்.15) நள்ளிரவு முதல் பாஸ்டேக் கட்டாயம் என்று
 

சுங்கச்சாவடிகளில் தானியங்கி சுங்கக் கட்டணம் வசூலிக்கும் பாஸ்ட் டேக் முறை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் வாகன ஓட்டிகள் டிஜிட்டல் முறையில் சுங்கக் கட்டணத்தை செலுத்த முடியும். இதனால் வாகனங்கள் நிற்கும் நேரம் குறையும் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்திருந்தது. இருப்பினும் சிலர் பாஸ்ட் டேக்மூலம் கட்டணம் கட்டினாலும் பலர் இன்னும் பாஸ்ட் டேக்வசதியை தங்கள் வாகனங்களில் செய்துகொள்ளவில்லை.

இந்நிலையில் நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு நாளை (பிப்.15) நள்ளிரவு முதல் பாஸ்டேக் கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாஸ்டேக் இல்லாத வாகனங்கள் வழக்கமான கட்டணத்தை விட இருமடங்கு செலுத்த வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாஸ்டேக் முறைக்கு மாறுவதற்கான அவகாசம் நாளை நள்ளிரவுடன் முடியும் நிலையில் மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. பாஸ்ட் டேக் பொருத்துவதற்கான காலக்கெடு இனியும் நீட்டிக்கப்படாது எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.