18 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சென்னையின் சாலைகளை அலங்கரித்த டபுள் டக்கர் பேருந்து!
18 ஆண்டுகளுக்குப் பிறகு டபுள் டக்கர் பேருந்து சென்னையின் சாலைகளில் மீண்டும் அடையாளமாக இயங்கத் தொடங்கியுள்ளது.
சென்னையின் அடையாளமாக விளங்கிய டபுள் டக்கர் பேருந்து 1970 ஆம் ஆண்டில் இருந்து தாம்பரம் முதல் சென்னை உயர்நீதிமன்றம் வரை இயக்கப்பட்டு வந்தது. சென்னையில் பல்வேறு இடங்களில் மேம்பால பணிகள் நடைபெற்றதால் 2008 ஆம் ஆண்டு டபுள் டக்கர் பேருந்து இயக்கம் நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது தமிழக அரசு இரண்டு அடுக்கு பேருந்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயக்க திட்டமிடப்பட்டது. இதை தொடர்ந்து 20 பேருந்துகளுக்கு டெண்டர் விடப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் அமெரிக்க வாழ் தமிழர்கள் மற்றும் அசோக் லைலாண்ட் ஒரு கோடியே 86 லட்ச ரூபாய் மதிப்பிலான மின்சார குளிர்சாதன வசதி உள்ள டபுள் டக்கர் பேருந்தை முதலமைச்சரிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு பண்பாடு கலாச்சார சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக முதலமைச்சர் முக ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதன் முதற்கட்டமாக அரசு காப்பகங்களில் உள்ள மாணவர்களை சென்னையின் பிரதான இடமான எல்ஐசி, ஸ்பென்சர், சென்னை சென்டல் ரயில் நிலையம், பாரிமுனை தலைமைச் செயலகம், மெரினா கடற்கரை, ஐஸ் கவுஸ் என்று பேருந்தில் சுற்றுலா அழைத்துச் சென்றது அவர்களை மகிழ்ச்சியில் வாழ்த்தியதோடு புதிய அனுபவமாகவும் மாறியது.
பொங்கல் பண்டிகை வரை தீவுத்திடலில் இந்த பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மாணவர்களுக்கு இலவசமாகவும் பொதுமக்களை கட்டணம் செலுத்தியும் சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டிருக்கிறது. மேலும் பொங்கலை முடிந்த பின்பு இணையதளம் மூலமாக பொதுமக்கள் அனைவரும் புக்கிங் செய்து சென்னையின் பிரதான சுற்றுலா தளங்களுக்கு டபுள் டக்கர் பேருந்து மூலமாக பயணம் செய்யலாம். மேலும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் வரை அடுத்த கட்டமாக இந்த டபுள் டக்கர் பேருந்து இயக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.