×

அக்னி மூலையில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை! ஒரு முழுமையான வாஸ்து வழிகாட்டி..!

 

ஒரு வீட்டிலோ அல்லது தொழில் நிறுவனங்களிலோ தென்கிழக்கு மூலை பாதிப்படைந்தால் அந்த இடத்திற்கு தொடர்புடைய பெண்களின் உடல் நலம் மற்றும் மனவளம் கட்டாயம் பாதிப்படயும் என்பதினை நாம் புரிந்துக் கொள்ளவேண்டும்.

அக்னி மூலையில் சமையலறை அமைக்க வேண்டும். அவ்வாறு அமைக்க முடியாமல் போனால் கிழக்கு முகமாக அமைக்கலாம் அல்லது அடுப்பு, எரிவாயு போன்றவை இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம்.

அக்னி மூலை நன்றாக அமைந்த வீட்டில் பெண் பிள்ளைகளும், வீட்டில் தலைவி ஆரோக்கியமாக இருப்பார்கள்.

தென்கிழக்கு மூலையில் வரக்கூடியவை:

* சமையறை கிழக்கு பார்த்தவாறு அமைக்கவேண்டும்.

* பூஜை அறை

தென்கிழக்கு மூலையில் வரக்கூடாதவை:

* குடும்ப தலைவன் அல்லது தலைவி படுக்கையறை

* பள்ளம், கிணறு, ஆழ்துளை கிணறு

* கழிவுநீர் தொட்டி

* கார் போர்டிகோ

* குளியலறை / கழிவறை

* உள்மூலை படிக்கட்டு

* வெளிமூலை மூடப்பட்டு தூண்கள் போட்ட படிக்கட்டு

* மேல்நிலை தண்ணீர் தொட்டி

ஈசானிய மூலை: வட கிழக்கு மூலையைதான் ஈசானிய மூலை என்று சொல்லுவார்கள். வீட்டிற்கு உள்ளே வரக்கூடிய அனைத்து விதமான ஐஸ்வரியங்களும், நல்லவைகளும் இந்த வழி மூலமாகத்தான் வீட்டிற்குள் நுழையும். இந்த மூலையை எப்போதுமே சுத்தமாக வைத்திருப்பது மிகவும் நல்லது. குழந்தைகள், முதியவர்கள் தங்கும் அறை இவைகளை இந்த மூலையில் அமைத்துக் கொள்ளலாம். இந்த ஈசானிய மூலையில் அதிகமாக பளு இருக்கும் பொருட்களையும் வைக்கக்கூடாது. குளியலறை செப்டிக்டேங்க் கட்டாயம் அமைக்கக் கூடாது. உங்கள் வீட்டில் எதிர்பாராமல் பரணை ஈசானிய மூலையில் வரும்படி அமைந்துவிட்டால், அந்த இடத்தில் மட்டும் பொருட்களை வைக்காமல் இருப்பது மிக மிக நல்லது. ஈசானிய மூலையில் கிணறு, குடிநீர் தொட்டி போன்றவைகளை அமைத்துக் கொள்ளலாம். இந்த மூலையில் கட்டாயமாக கனமாக இருக்கும் பீரோவை வைக்கவே கூடாது.

குபேர மூலை: தென்மேற்கு மூலையில் உங்கள் வீட்டில் பீரோவை வைத்துக்கொள்ளலாம். வாய்ப்பு இல்லாதவர்கள் வடமேற்கு மூலையில் மேற்கு பார்த்தவாறு வைத்துக்கொள்ளலாம்.

வாயு மூலை: வாயு மூலை என்று சொல்லப்படும் வடமேற்கு மூலையில் குளியலறை கழிவறை இவைகள் அமைக்கப்பட வேண்டும். மாறாக வட கிழக்கு திசையில் குளியலறை கழிவறை இருந்தால் வீட்டில் பணப் பிரச்சனை குழந்தைகளுக்கு கல்வியில் பிரச்சினை உண்டாகும்.

நிருதி மூலை: ஒருவருடைய வீட்டில் நிருதி மூலையில் முதன்மை படுக்கை அறை அமைக்கப்பட வேண்டும். அதாவது தென்மேற்கு மூலையை நிருதி மூலை என்று சொல்லுவார்கள்.