"டிக்கெட் கிடைக்கலனு கவலை வேண்டாம்!" – தாம்பரம் - தென்காசி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்!
சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி மற்றும் தாம்பரம் - தென்காசி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி ஒருவழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (ரெயில் எண் 06151), நவம்பர் 5-ந்தேதி (வியாழக்கிழமை) இரவு 11.50 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 3.15 மணிக்கு கன்னியாகுமரியைச் சென்றடையும்.
கன்னியாகுமரி - சென்னை எழும்பூர் ஒருவழி சூப்பர்பாஸ்ட் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (ரெயில் எண் 06152), நவம்பர் 9-ந்தேதி (திங்கட்கிழமை) இரவு 11.20 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
தாம்பரம் - தென்காசி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (ரெயில் எண் 06049), நவம்பர் 7-ந்தேதி (சனிக்கிழமை) காலை 5 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, அதே நாள் மாலை 4.45 மணிக்கு தென்காசியைச் சென்றடையும்.
செங்கோட்டை - தாம்பரம் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (ரெயில் எண் 06050), நவம்பர் 9-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 3 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக, இந்தச் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.