×

இந்த மாதிரி பெண்கள் வேண்டாம் : இளைஞரின் பதிவு வைரல்..!

 

வாழ்க்கைத் துணையை தேடும்போது உயரம், கல்வி, வருமானம், தோற்றம் போன்ற பல அம்சங்களைக் கருத்தில் கொள்வது வழக்கம். ஆனால், ஹரியானாவை மையமாகக் கொண்ட 'நாட் டேட்டிங்' தளத்தின் பிரீமியம் உறுப்பினர் ஒருவர், உடலில் டாட்டூ குத்தியுள்ள பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளத் தான் விரும்பவில்லை என்று கூறியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த அனுபவத்தை தளத்தின் இணை நிறுவனர் ஜஸ்வீர் சிங் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டார். டாட்டூ குத்துவது தொடர்பான நிபந்தனையை தான் சந்திப்பது இதுவே முதல் முறை என்று தெரிவித்தார்.

நாட் டேட்டிங் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஜஸ்வீர் சிங் இந்த சம்பவம் குறித்து அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ஒரு திருமணத் தளத்தை நிர்வகிப்பது என்பது, உயரம், சம்பளம், நிறம், கல்வி மற்றும் தொழில் தொடர்பான விருப்பத்தேர்வுகள் உட்பட பயனர்களின் தேவைகளை கேட்டறிந்து அதற்கேற்றாற்போல் வடிவமைப்பதாகும்.

இது எல்லாம் மிகவும் பொதுவானவை ஆனால் சமீபத்திய இந்த பயனரின் கோரிக்கை என்னை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

வரன் பார்க்கும் செயல்முறையில் இது போன்ற ஒரு விருப்பத்தை எவ்வாறு சேர்க்க முடியும் என்று இந்த சம்பவம் தன்னை யோசிக்க வைத்தாக நிறுவனர் ஜஸ்வீர் சிங் தெரிவித்துள்ளார். மேலும் செயலியின் வடிவமைப்பில் நீங்கள் பச்சை குத்தியவரா அல்லது இல்லையா போன்றவற்றை எவ்வாறு சேர்க்க முடியும் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். ஒரு துணை தேடுபவர்களிடமிருந்து பலவிதமான தேவைகளை இதுவரை கேட்டிருக்கிறேன் ஆனால் இந்த குறிப்பிட்ட தேவை தனக்கு புதிதாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் சமூக ஊடகங்களில் இந்த சம்பவம் விவாதத்தை தூண்டியுள்ளது. அதில் சிலர் இவ்வறான விருப்பத்தேர்வுகளை செயலியில் சேர்ப்பதற்கு பதிலாக இருவரும் நேரடியாக உரையாடலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் இது புதிதான நிபந்தனை ஒன்றும் இல்லை என்றும் சில நிறுவனங்கள் கூட பச்சை குத்திய ஆட்களை வேலைக்கு எடுப்பதில்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்