ரயிலில் இனி காத்திருக்க வேண்டாம்! முன்பதிவு அட்டவணை தானியங்கி வெளியீடு: தெற்கு ரயில்வே அசத்தல்!
Dec 12, 2025, 07:00 IST
முன்பதிவு செய்த டிக்கெட்டுகளின் நிலைகுறித்த விபரம், ரயில் புறப்படும் 4 மணி நேரத்துக்கு முன் வெளியிடப்பட்டு வந்த நிலையில், முன்பதிவு அட்டவணையை வெளியிடும் முறை கடந்த ஆகஸ்ட் மாதம் அமலுக்கு வந்தது.
இந்நிலையில், தானியங்கி முறையில் முன்பதிவு அட்டவணை வெளியிடும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தெற்கு ரயில்வேயின் அனைத்து கோட்டங்களிலும் முன்பதிவு அட்டவணையைத் தானியங்கி முறையில் வெளியிடும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளதாகவும், இந்த நடைமுறை காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் பயணியருக்கு உதவியாக இருக்கும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.