×

இந்த மாத்திரைகளை சாப்பிடாதீர்கள்- மருத்துவ கூட்டமைப்பு எச்சரிக்கை

 

தமிழகம் முழுவதும் பலருக்கு காய்ச்சல், தொண்டைவலி, உடல் சோர்வு போன்றவைகளால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


நாளுக்கு நாள் வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை என்பது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அதிகரித்து வருவதால், பொதுமக்களிடையே ஒரு வகையான அச்சமும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது. அதீதி காய்ச்சல், தொண்டை வலி காரணமாக பொதுமக்கள் மருத்துவமனை சென்று சிகிச்சை பெறாமல், மருந்துகடைகளில் மருந்துகளை வாங்கி உட்கொள்கின்றனர். இதனிடையே தற்போது பரவிவரும் வைரஸ் காய்ச்சல் பாதிப்புகளை தடுக்க தேவையான சிகிச்சை வசதிகள் அரசு மருத்துவமனைகளில் செய்யப்பட்டுள்ளதாகவும், அவசியம் ஏற்பட்டால் காய்ச்சல் முகாம்கள்  அமைக்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். வைரஸ் காய்ச்சலை தடுக்க, கைகளை சுத்தமாக வைத்திருந்து, தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் இந்திய மருத்துவ கூட்டமைப்பு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் H3N2 என்ற பருவ காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இது 5-7 நாட்கள் இருக்கும். இருமல் 3 வாரம் இருக்கலாம். இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆன்டிபயாடிக்ஸ் மாத்திரைகள் தரக்கூடாது. எனவே, Azithromycin and Amoxiclav, amoxicillin, norfloxacin, oprofloxacin, ofloxacin, levofloxacin மாத்திரைகள் பரிந்துரைக்க வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.