×

வெறுப்பைப் பரப்பாதீர்! - தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது அப்பட்டமான பொய்..!

 

தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், வடமாநிலத்தவர்கள் மீதுள்ள வெறுப்பால் கொலை நடந்ததாக ஆதாரமற்ற வதந்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது என்றும் தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-.பீகார் மாநிலத்தில் இருந்து வேலைக்காக சென்னை வந்த கவுரவ்குமார் மற்றும் அவரது குடும்பத்தை கொலை செய்த சம்பவத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிகந்தர், நரேந்திர குமார், ரவீந்திரநாத் தாகூர், விகாஸ் உள்ளிட்ட 5 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். .ஆனால், தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், வடமாநிலத்தவர்கள் மீதுள்ள வெறுப்பால் கொலை நடந்ததாக ஆதாரமற்ற வதந்தியைப் பரப்பி வருகின்றனர்.

இருமாநிலங்களுக்கு இடையே பிரிவினையை உண்டாக்கும்படி செய்திகளைப் பகிர்வது குற்றம். வெறுப்பைப் பரப்பாதீர்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.