×

இந்த வாய்ப்பை தவறவிடாதீங்க..! தங்கம் விலை சரிவு..

 


சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.43,880க்கு விற்கப்படுகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் அதிரடியாக ஏற்றம் கண்டது.  அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ஒரு சரவன் ரூ.43,680க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து சனிக்கிழமை ( ஜூலை 8) அன்று அதிரடியாக  ஆபரணத் தங்கத்தின் விலை 304 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 43,960 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது.  நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டது.

 இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.  இன்றைய தினம் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய்  சரிந்து ஒரு சவரன் ரூ.43,880க்கும்,  கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ. 5,485க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  அதேநேரம் சில்லறை விற்பனையில்  வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.76.80 ஆக விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.76,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது.