மிஸ் பண்ணிடாதீங்க..! இன்று வானில் நடக்கப்போகும் அதிசயம்..!
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் நிலவு பிரகாசமாக காட்சியளிக்கும். இது பூமிக்கு மிக அருகில் வரும்போது மிகவும் பிரகாசமானதாக தெரியும். இதனை சூப்பர் மூன் என்று வானியல் ஆய்வாளர்கள் அழைக்கின்றனர்.
அதன்படி, இந்த ஆண்டின் இரண்டாவது சூப்பர் மூன் இன்று இரவு தோன்றுகிறது. அதன்படி, பூமியிலிருந்து சுமார் 3 லட்சத்து 57 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் நிலவு வர உள்ளது.
சூப்பர் மூன் என்றால் என்ன? சந்திரன், அதன் சுற்றுப்பாதையில் சுழலும்போது, சில நேரங்களில் பூமிக்கு மிக அருகில் வருகிறது. அதே நேரத்தில் முழு நிலவு இருந்தால், அது முழு நிலவு என்று அழைக்கப்படுகிறது. 2025ஆம் ஆண்டில் மொத்தம் 3 சூப்பர் மூன்கள் தோன்றும் என்று கூறப்படுகிறது. ஆனால், இன்று நவம்பரில் வரும் ஒன்று மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.
இந்த முறை சந்திரன் வழக்கத்தை விட பூமிக்கு 50,000 கிலோ மீட்டர் அருகில் வருகிறது. இதன் காரணமாக, அது மிகப் பெரிய அளவில் வானத்தில் ஒரு பளபளப்பான வட்டாகத் தோன்றும். வானியலாளர்கள் இந்த இரவை 'ஸ்பெக்ட்ரல் நிகழ்வு' என்று விவரித்துள்ளனர். ஏனென்றால் சந்திரன் பூமியின் வளிமண்டலத்திலிருந்து வரும் ஒளியைப் பிரதிபலித்து பிரகாசமாகிறது.
இதன் காரணமாக, வழக்கத்தைவிட நிலவு 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் பிரகாசமானதாகவும் இருக்கும் என்று அமெரிக்காவின் நாசா அமைப்பு தெரிவித்துள்ளது. இதனை வெறும் கண்களால் காணலாம் என்றும் நாசா தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நாசா விஞ்ஞானிகள் கூறுகையில், இன்று மாலை 6:30 மணியிலிருந்து சூப்பர் மூன் நிகழ்வைக் காண முடியும் எனத் தெரிவித்துள்ளனர்.
நிலவு தனது அதிகபட்ச பிரகாசத்தினை மாலை 6:49 மணியளவில் அடையும் என்றும் இதனைப் பார்ப்பதற்கு டெலஸ்கோப் போன்ற உபகரணங்கள் தேவையில்லை என்றும் கூறியுள்ளனர்.