மதுரையில் நடந்ததை மறந்துடாதீங்க விஜய்..! - சர்க்கார் பட விவகாரத்தை நினைவுபடுத்தி ராஜன் செல்லப்பா எச்சரிக்கை..!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அண்மையில் அதிமுகவை ஊழல் கட்சி என்று விமர்சித்திருந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இதற்கு அதிமுக நிர்வாகிகள் பலரும் எதிர்வினையாற்றி வரும் நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வி.வி. ராஜன் செல்லப்பா தனது எக்ஸ் (X) தளத்தில் விஜய்யை நேரடியாக டேக் செய்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாகப் பேசிய ராஜன் செல்லப்பா, "புதிய கட்சியைத் தொடங்கியுள்ள நீங்கள், மக்களுக்காக என்ன திட்டங்களைச் செயல்படுத்தப் போகிறீர்கள்? உங்கள் கொள்கை என்ன? என்பதைப் பற்றிப் பேசியிருக்க வேண்டும். அதை விடுத்து, தமிழகத்தின் மாபெரும் இயக்கமான அண்ணா திமுகவை 'ஊழல் கட்சி' எனத் தொட்டுவிட்டீர்கள். இனி எங்களால் சும்மா இருக்க முடியாது" என ஆவேசமாகத் தெரிவித்தார்.
மேலும், விஜய்யின் பழைய திரைப்படச் சர்ச்சை ஒன்றைக் குறிப்பிட்டு அவர் பேசியபோது, "சர்க்கார் திரைப்படம் வெளியான போது, மறைந்த முதல்வர் அம்மா (ஜெயலலிதா) வழங்கிய இலவச லேப்டாப்பைத் தீயிலிட்டு எரிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. அப்போது மதுரையில் என்ன நடந்தது என்பதை விஜய் மறந்துவிட வேண்டாம். அந்தப் படத்தை நாங்கள் ஓடவிடாமல் தடுத்தோம். அதே நிலை மீண்டும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்" எனப் பகிரங்க எச்சரிக்கை விடுத்தார்.