மட்டன் அல்லது சிக்கன் சாப்பிடுவதற்கு முன் அல்லது பின் பால் குடிக்க கூடாது..? ஏன் தெரியுமா..?
மட்டன் அல்லது சிக்கன் சாப்பிடுவதற்கு முன் அல்லது பின் பால் குடிக்க வேண்டாம். இது செரிமானப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். பால் மட்டுமன்றி, மட்டன் சாப்பிட்ட பிறகு பால் சார்ந்த பொருட்கள் உட்கொள்வது, செரிமானத்தில் பிரச்சனை ஏற்படுத்தும் என்பதால் அவற்றை தவிர்க்க அறிவுறுத்துகிறது ஆயுர்வேதம். எனவே முடிந்தவரை மட்டனுக்குப் பிறகு தயிர், மோர்கூட அதிகமாக உட்கொள்ள வேண்டாம். செரிமானத்தை மேம்படுத்தும் வகையில் மிளகு ரசம் சாப்பிடுவது நல்லது.
மட்டன், நம் உடலில் வெப்பத்தை உருவாக்குகிறது என்பதால், தேன் சாப்பிட்ட பிறகு சாப்பிடக்கூடாது. ஏனெனில் தேன் சாப்பிடுவதும் உடலை வெப்பமாக்கும். இரண்டும் சேர்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
பலரும் மதியம் சாப்பிட்ட பிறகு தேநீர் குடிக்க விரும்புவர். சிலர் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மதிய சாப்பாடே 3 - 4 மணிக்குதான் எடுத்துக் கொள்வார்கள். பின், ‘சரி மாலை வந்துவிட்டதே’ என தேநீர் குடிப்பார்கள். ஆனால் மட்டன் சாப்பிட்ட பிறகு தேநீர் குடிக்கக்கூடாது. ஏனெனில் அது செரிமானம் மற்றும் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும் அபாயம் கொண்ட காம்பினேஷன்.
மிகக் காரமான வேறு ஏதேனும் உணவுகள், சர்க்கரை உணவுகளை மட்டன் சாப்பிட்டபின் உட்கொள்ள வேண்டாம். ஏனெனில் இவை வயிறு நிறைந்த உணர்வை கொடுத்து, மந்தப்படுத்தும். ஞாயிறு போன்ற நாட்களில் சாப்பிடவுடன் தூங்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, இது சிக்கலை ஏற்படுத்தலாம்.
மட்டன், மெதுவாக செரிமானமாகும் ஒரு உணவு. இதனை சாப்பிட்டவுடன் வாழைப்பழம் போன்ற விரைவாக செரிமானமாகும் உணவு உட்கொள்வது வாயு தொந்தரவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் தவிர்க்கவும்.
முடிந்தவரை மட்டன் சாப்பிட்ட பிறகு நிறைய தண்ணீர் குடிக்கவும். உடனே படுக்கைக்கு செல்லாமல், சிறிது நேரம் நடக்கவும். ஏதேனும் தொந்தரவு தெரியவந்தால், மாலையில் வெதுவெதுப்பான பெருஞ்சீரக நீர் அல்லது இஞ்சி சேர்க்கப்பட்ட மூலிகை தேநீர் குடிப்பது நல்லது. வயிறு நிறைந்து போகும் அளவுக்கு மட்டன் உட்கொள்ளாமல், காய்கறிகள் - தண்ணீருக்கு இடமிருக்கும் வகையில் உட்கொள்வதே சிறந்த வழி. போலவே மட்டனை மதியம் மட்டும் உட்கொள்ளவும். இரவில் தவிர்த்துவிடவும். அப்படி இரவு சாப்பிட நினைப்பவர்கள், சீக்கிரமே சாப்பிட்டுவிட்டு சில மணி நேரம் லேசான உடலுழைப்பாவது இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.