×

மக்களே இதை மட்டும் செய்யாதீங்க..! குண்டர் சட்டம் பாயும்..!   

 

எல்பிஜி சிலிண்டர்களை பதுக்கினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

தருமபுரி மாவட்ட, ஆட்சியர் அலுவலக குறிஞ்சி கூட்டரங்கில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தின் சார்பில் எரிவாயு தட்டுப்பாடின்றி கிடைக்க அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் சதீஸ் இன்று ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக்கூட்டத்தில் எரிவாயு உருளைகளை பதுக்கல் செய்வது அல்லது கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதோ கடும் குற்றமாகும், எனவே சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சதீஸ் அறிவித்தார்.

தருமபுரி மாவட்ட, ஆட்சியர் அலுவலக குறிஞ்சி கூட்டரங்கில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தின் சார்பில் எரிவாயு தொடர்ந்து தட்டுப்பாடின்றி கிடைக்க அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று (01.04.2026) நடைபெற்றது.

தருமபுரி மாவட்டத்தில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் போதுமான அளவு இருப்பு உள்ளதால் பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள். அரசு பள்ளி கல்லூரி மாணவர் மாணவியர் விடுதிகள் மற்றும் காலை சிற்றுண்டிகளுக்கு வழங்கப்படும் வணிகப் பயன்பாட்டு உருளைகள் தட்டுப்பாடின்றி வழங்கப்பட்டு வருகின்றது.

உணவக நிர்வாகிகள் (Hotel) மற்றும் வணிகர்களுக்கு வழங்கப்படும் வணிக உருளைகள் மட்டும் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனங்கள் 70% ஆக உயர்த்தியுள்ளது. ஆகையால் 03.04.2026 முதல் 70% விநியோகிப்பதாக தெரிவித்துள்ளது.

எரிவாயு உருளைகளை பதுக்கல் செய்வது அல்லது கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதோ கடும் குற்றமாகும். எனவே சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

எரிவாயு உருளைகளை விநியோகம் செய்யும் பணியாளர்கள் மற்றும் முகவர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது தொடர்பான புகார்களுக்கு 04342-233299, 9445000216 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும்.

எரிவாயு உருளைகள் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு கிடைக்கும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் சதீஸ் தெரிவித்தார்.