இந்த வீடியோ லிங்கை கிளிக் செய்யாதீர் – இணையப் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை..!
Dec 5, 2025, 05:40 IST
இன்ஸ்டகிராம் மற்றும் எக்ஸ் தளத்தில் கடந்த சில நாட்களாக 19 நிமிட ஆபாச வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனிடையே, இந்த வீடியோ செயற்கை நுண்ணறிவு அல்லது டீப்ஃபேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அந்த வீடியோவில் உள்ள நபர்கள் யார் என்று உறுதியாகத் தெரியாத நிலையில், சமூக ஊடகப் பயனர்கள் ஆவணமற்ற ஆதாரங்களின் அடிப்படையில் பல பெண்களைத் தவறாக அடையாளம் கண்டு குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், அந்த வீடியோவின் இணைப்பைக் கிளிக் செய்யும் பயனர்கள்மீது சைபர் குற்றவாளிகள் Malware-ஐ ஏவி, அவர்களின் வங்கித் தகவல்களைத் திருட முயற்சிப்பதாக இணையப் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.