×

தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டாம் : த.வெ.க.வினருக்கு தலைமை உத்தரவு..!

 

கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த மாதம் (செப்டம்பர்) 27-ந் தேதி பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.இந்த நிலையில் தமிழக வெற்றிக்கு கழகம் (த.வெ.க.) சார்பில் தொண்டர்கள் யாரும் தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.

கரூர் துயர சம்பவத்தில் உயிரிழ்ந்த 41 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கட்சியின் சார்பில் தொண்டர்கள் யாரும் தீபாவளியை கொண்டாட வேண்டாம் என இந்த அறிவிப்பை என்.ஆனந்த் வெளியிட்டுள்ளார். நாடு முழுவதும் நாளை (20ம் தேதி) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.