ரீல்ஸ் வேண்டாம், ரியாலிட்டிக்கு வாங்க..! முதலமைச்சர் விஜயை குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம்..!
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சட்டமன்றத்தில் மாண்புடன் பதவிக்குரிய பொறுப்புடன் நடந்து கொள்வது எப்படி என்பது குறித்து முதல்வர் விஜய்க்கு வகுப்பு எடுப்பது எப்படி என்பது போன்ற ஏ.ஐ.யால் உருவாக்கப்பட்ட படத்தை எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த படத்தில்,
“1. சட்டமன்றம் ஒரு பொது மேடை மக்களுக்காக பேசவதே உங்கள் கடமை.
2. எதிர்க்கட்சிகளை மதியுங்கள் - வேறுபாடு கருத்தில் இருக்கலாம், விரோதத்தில் அல்ல.
3.பேச்சில் கட்டுப்பாடு காக்கவும் உணர்ச்சியை அல்ல, உண்மையை பேசுங்கள்..
4. தரவுகளுடன் பேசங்கள் உண்மை, ஆதாரம், திட்டம் அவசியம்.
5. ஒரே நேரத்தில் ஒரே விஷயம் தெரிவான பேச்சு, தெளிவான செய்தி.
6.தனிப்பட்ட தாக்குதலை தவிர்க்கவும் கருத்தை விமர்சியுங்கள், நபரை அல்ல.
7. மக்களின் நம்பிக்கையை வெல்லுங்கள் - செயலால் நிருயுபியுங்கள், சொல்லால் அல்ல.
8. இறுதியில் தீர்க்கமான, நேர்மறையான செய்தியுடன் முடிக்கவும்.
சட்டமன்றம் மக்களின் குரல் மக்களின் உரிமை மக்களின் முன்னேற்றம்
மரபை காப்போம் மாண்பை உயர்வோம் தமிழ்நாட்டை முன்னேற்றுவோம்
பொன்மொழி:
சட்டமன்றம் சச்சரவு செய்யும் இடமல்ல; சேவை செய்யும் இடம்”எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த பதிவில், “சார் நான் ஒரு ஆக்க்ஷன் பண்ணிக்கலாமா!? நாளைய தீர்ப்பு தொடங்கி, இன்று மக்களின் தீர்ப்பால் முதல்வரானது வரை விஜய்யின் நடிப்பு நன்றாகவே வளர்ந்துள்ளது... வாழ்த்துக்கள். ஆனால், பஞ்ச் டயலாக் பேசுவதும், விசில் அடிப்பதும், குட்டி கதை சொல்வதும் என சட்டமன்றத்தை சூட்டிங் தளமாக ( Shooting Spot) ஆக மாற்றுவது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல.... "5 நிமிசம் பேசுனதுக்கே என்னாச்சு தெரியும்ல" என்று பஞ்ச் அடிக்கும் முதல்வர் அவர்களே, அதையே தான் நாங்களும் சொல்றோம் மின்வெட்டு, விவசாயிகளின் பிரச்சினைகள், பாலியல் வன்கொடுமைகள், சட்ட ஒழுங்கு சீர்கேடு பற்றியோ அல்லது நீங்கள் அள்ளி வீசிய வாக்குறுதிகள் பற்றியோ ஒரு 5 நிமிஷமாச்சு பேசுங்க.... ரில்ஸ் (Reels) அ விட்டுட்டு ரியாலிட்டிக்கு (Reality வாங்க!!!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
*சார் நான் ஒரு ஆக்க்ஷன் பண்ணிக்கலாமா!?*
— DJayakumar (@djayakumaroffcl) June 23, 2026
நாளைய தீர்ப்பு தொடங்கி, இன்று மக்களின் தீர்ப்பால் முதல்வரானது வரை திரு.விஜய் அவர்களின் நடிப்பு நன்றாகவே வளர்ந்துள்ளது... வாழ்த்துக்கள்!!
ஆனால், பஞ்ச் டயலாக் பேசுவதும், விசில் அடிப்பதும், குட்டி கதை சொல்வதும் என சட்டமன்றத்தை Shooting… pic.twitter.com/LcLlSJPpPj