☰
×

"பட்டாசை கையில் பிடிச்சு வெடிக்காதீங்க!" – மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் அதிரடி எச்சரிக்கை!

 

மக்கள் அனைவரும் பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்குமாறு முதல்வர் விஜய் சார்பில் அமைச்சர் அருண்ராஜ் அறிவுறுத்தல் வழங்கி உள்ளார்.அவரது அறிக்கை: தீபாவளி பண்டிகையை ஒட்டி அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். அதே நேரம் பாதுகாப்பான தீபாவளியாக இது அமைய வேண்டும் என்பதில் நாம் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.

தீபாவளி விபத்துகளை கையாள்வதற்காக மருத்துவக் கல்வி, மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை தயாராக இருக்கிறது. தீபாவளித் திருநாளை ஒட்டி 108, 104, 102 ஆகிய சேவைகளுக்கான அவசர கால மையம் இன்று (நவம்பர் 6) முதல் மூன்று சுழற்சி முறையின் கீழ் முழு பலத்துடன் செயல்படும். அனைத்து அவசர கால ஊர்திகளும் தடையில்லா சேவைகளை வழங்க வேண்டி முன்கூட்டியே அனைத்து பராமரிப்பு பணிகளையும் நிறைவு செய்துள்ளோம். அரசு இவ்வாறு தீபாவளியை ஒட்டி ஏற்படும் விபத்துகளை கையாள முழுமையான அளவில் தயாராக இருக்கிறது.

பொது மக்களும் பாதுகாப்பான முறையில் தீபாவளியை கொண்டாட வேண்டும்,.பெற்றோர்கள், பெரியவர்கள் மேற்பார்வையில் மட்டுமே பிள்ளைகள் பட்டாசு வெடிக்க வேண்டும். பட்டாசுகளை கையில் பிடித்து வெடிப்பது மற்றும் வெடிக்காத பட்டாசுகள், தரைச் சக்கரங்கள் போன்றவற்றில் இருந்து வெடி மருந்துகளை சேகரித்து தனியாக வைத்து அவற்றை கொளுத்துவது போன்றவற்றை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.குழந்தைகளிடம் பெற்றோர் இதை எடுத்துச் சொல்லி கண்காணித்து. பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடுமாறு முதல்வர் விஜய் சார்பில் வேண்டுகிறோம். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

இவ்வாறு அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ளார்.