இரண்டு சொட்டு கண்ணீருக்கு மயங்காதீர்கள்- விஜய் சேதுபதி மீண்டும் சர்ச்சை
“ஒரு தலைவர் பிரச்சனை வந்ததும், அதற்கான பழியை எதிரணியினர் மீது போட்டுவிட்டு அங்கிருந்து ஓடிவிடுவது Leadership கிடையாது” என விஜய் சேதுபதி கூறிய கருத்து தற்போது பேசுபொருளானது.
இந்நிலையில் மீண்டும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கருத்து கூறியுள்ள நடிகர் விஜய் சேதுபதி, “தேர்ந்தெடுப்பதற்கு ஆள் இருக்கிறார்கள் என்பதனால், Yes I am bad! I have a right to kill people-ஆ? இரண்டு சொட்டு கண்ணீருக்கு மயங்கிவிடுவீர்கள் என்றால், எதற்கு கருத்து வைக்கிறீர்கள்? பொறுப்பில் இருப்பவர்களிடம் கருத்துக் கேட்டால் பதில் சொல்ல வேண்டும். அதுதான் அவர்கள் வேலை. அதற்கு அழுது சமாளிக்கக்கூடாது. நல்லவன் வேடம் போடுபவர்கள் எவ்வளவு உறுதியாக வேண்டுமானாலும் பேசட்டும், ஆனால் அனைவருக்கும் சிந்திக்க தெரிய வேண்டுமே! அழுகிற ஒருத்தருக்கு ஆதரவாக செல்ல வேண்டாம் என நான் சொல்லவில்லை. ஆனால், அதனால், எல்லாம் டம்மியாக தெரிவீர்கள். ஜோக்கராவீர்கள்.” எனக் கூறியுள்ளார்.
-