×

ஒரு பவுன் தங்கம் விலை விஜய்க்குத் தெரியுமா? பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் கேள்வி..! 

 

பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 11-ஆம் தேதி திருச்சிக்கு வருகை தருவது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வினோஜ் பி.செல்வம், “நாளை பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். தமிழக மக்களுக்கு நாளை திருச்சியில் பல திட்டங்களை அர்ப்பணிக்க உள்ளார்.

விஜயின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துக் கருத்துக் கூற முடியாது. ஆனால் பெண்கள் மனதை விஜயின் நடவடிக்கை நிச்சயம் பாதிக்கும்.. அதெல்லாம் அவ்வளவு worth இல்லை என விஜய் கூறுகிறார். ஆனால் அது worth ஆ இல்லையா என்பது தேர்தல் முடிவில்தான் விஜய்க்கு தெரியும்.

விஜய் சர்க்கார் படத்தில் அரசின் இலவசப் பொருட்களைத் தூக்கிப் போட்டு  உடைத்தார். அவர் அறிவித்த 'சூப்பர் சிக்சர்' எனும் வாக்குறுதிகள் ஒருவகையான லாட்டரியின் பெயர். லாட்டரியுடன்  ஏற்கனவே விஜயக்கு  பல தொடர்புகள்  உண்டு. லாட்டரி , சூதாட்டம் போலதான் விஜயின்  அரசியலும் உள்ளது.

ரஜினி அஜித் போன்ற பல முன்னணி நடிகர்கள் உள்ளனர். ஆனால் தனது ரசிகர்களை கூட கூட்டத்தில் ஒழுங்குபடுத்த முடியாதவராக விஜய் உள்ளார் . இவரால் நாட்டை எப்படி ஒழுங்குபடுத்த முடியும்..?

பக்குவமற்ற கட்சி தவெக. ஒரு பவுன் தங்கம் விலை என்ன என விஜய்க்கு தெரியுமா..? தாலிக்கு தங்கம் திட்டத்தில் 1 பவுன் எப்படி வழங்க முடியும்.... ஊடகங்களின் கவனத்தை பெற வக்குறுதியை  அறிவித்திருப்பார் விஜய்.

நாளை பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.  தமிழக மக்களுக்கு திருச்சியில் பல திட்டங்களை அர்ப்பணிக்க உள்ளார். திருச்சி நிகழ்வில் திமுகவின் அவல ஆட்சியை மக்களுக்கு எடுத்துரைப்பார். தமிழக மக்களுக்கு தேவையான இரட்டை எஞ்சின் அரசை பிரதமர் வழங்குவார். இலவச கலாசாரத்தில் இருந்து உண்மையான வளர்ச்சிப் பாதையில் செல்லும் அரசு அமைய மாபெரும் பொதுக்கூட்டமாக திருச்சி கூட்டம் அமையும்.’’

இவ்வாறு வினோஜ் பி செல்வம் தெரிவித்தார்.