ஃப்ரிட்ஜில் வைத்தாலும் பால் கெட்டுப்போகிறதா? நீங்கள் செய்யும் தவறுகள்!
ஃப்ரிட்ஜில் வைத்தாலும் பால் கெட்டுப்போகிறதா? நீங்கள் செய்யும் தவறுகள்!
பாலை நீண்ட நேரம் நல்ல நிலையில் வைத்திருக்க சில எளிய ஆனால் முக்கியமான டிப்ஸ்களை தெரிந்துகொள்வோம்.
பாலை வாங்கி வந்ததும் தேவையில்லாமல் நீண்ட நேரம் வெளியில் வைக்காதீர்கள். குளிர்சாதன வசதி தேவைப்படும் உணவுப் பொருட்களை விரைவாக ஃபிரிட்ஜில் வைப்பது முக்கியம். அறை வெப்பநிலையில் நீண்ட நேரம் இருந்தால் பாக்டீரியாக்கள் வேகமாக பெருகும் வாய்ப்பு உள்ளது.
ஃப்ரிட்ஜில் வைத்த பிறகும் பால் அடிக்கடி கெட்டுப்போவதற்கு அதைக் கதவுப் பகுதியில் (Door Shelf) வைப்பதே முக்கியக் காரணமாகும். ஃப்ரிட்ஜ் கதவை அடிக்கடி திறக்கும்போது ஏற்படும் வெப்பநிலை மாற்றத்தால் பால் விரைவில் கெட்டுப்போக வாய்ப்புள்ளது. எனவே, பாலை எப்போதும் ஃப்ரிட்ஜின் உள்கடந்த குளிர்ந்த தட்டுகளில் வைப்பதோடு, காய்ச்சிய பாலை நன்கு ஆறவைத்த பின்னரே ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.ஃபிரிட்ஜ் வெப்பநிலை 4°C அல்லது அதற்குக் கீழே இருப்பது பாதுகாப்பான சேமிப்பிற்கு பரிந்துரைக்கப்படுகிறது.
பால் பாக்கெட்டைத் திறந்துவிட்டால், அதை சுத்தமான, மூடியுள்ள பாத்திரத்தில் மாற்றி வைப்பது உதவியாக இருக்கும். பாத்திரம் சுத்தமாகவும், நன்கு மூடப்பட்டதாகவும் இருப்பது முக்கியம்.
மேலும், பாலை எடுத்த பிறகு மீதமுள்ள பாத்திரத்தை நீண்ட நேரம் வெளியே வைக்காமல் உடனே மீண்டும் ஃபிரிட்ஜில் வையுங்கள்.
சிலர் தேநீர் அல்லது காபி தயாரிக்க பாலை எடுத்து வைத்து, சிறிது நேரம் கழித்துதான் மீண்டும் ஃபிரிட்ஜில் வைப்பார்கள். இது நல்ல பழக்கம் அல்ல.
எவ்வளவு நேரம் பால் வெளியே இருக்கிறதோ, அவ்வளவு அதன் தரம் பாதிக்கப்படும் வாய்ப்பும் அதிகரிக்கும். குறிப்பாக அதிக வெப்பநிலையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ஃபிரிட்ஜை அளவுக்கு அதிகமாக நிரப்பினால், குளிர்ந்த காற்று சரியாகச் சுழலாமல் போகலாம். இதனால் உள்ளே இருக்கும் சில உணவுப் பொருட்களுக்கு தேவையான அளவு குளிர்ச்சி கிடைக்காமல் போகலாம். எனவே காற்று சுழல சிறிது இடைவெளி இருக்கும்படி பொருட்களை அடுக்குங்கள்.
பாலில் கீழ்க்கண்ட மாற்றங்கள் இருந்தால் பயன்படுத்தாமல் இருப்பது பாதுகாப்பானது:
• புளிப்பு அல்லது அசாதாரண வாசனை
• கட்டிகள் அல்லது திரிந்த தோற்றம்
• நிறம் அல்லது அமைப்பில் இயல்புக்கு மாறான மாற்றம்
• நீண்ட நேரம் சரியான குளிர்ச்சியின்றி வைக்கப்பட்டிருத்தல்
ஆனால் ஒரு முக்கிய விஷயம்: சில தீங்கு விளைவிக்கும் கிருமிகள் உணவின் வாசனை அல்லது தோற்றத்தை மாற்றாமலும் இருக்கலாம். எனவே சரியான வெப்பநிலையில் சேமிப்பதும், தயாரிப்பு லேபிளில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றுவதும் அவசியம்.
நினைவில் வைக்க வேண்டிய ஒரு சிம்பிள் ட்ரிக்!
பாலை ஃபிரிட்ஜ் கதவில் வைக்காமல், உள்ளே வெப்பநிலை நிலையாக இருக்கும் பகுதியில் வைத்து, பயன்படுத்தியவுடன் உடனே மூடி மீண்டும் ஃபிரிட்ஜில் வைப்பது அதன் ஃபிரெஷ்ஷை பாதுகாக்க உதவும்.
பால் வகை, பேக்கேஜிங் மற்றும் தயாரிப்பு முறையைப் பொறுத்து சேமிப்பு காலம் மாறுபடும். பொதுவாக சரியான குளிரூட்டலில் பாலை சுமார் ஒரு வாரம் வரை வைத்திருக்கலாம் என USDA வழிகாட்டுதல் குறிப்பிடுகிறது; இருப்பினும் பாக்கெட்டில் உள்ள “use by” மற்றும் சேமிப்பு வழிமுறைகளுக்கே முன்னுரிமை கொடுங்கள்.