×

தாம்பரம் ஆர்டிஓ அலுவலகத்தில் மாயமான ஆவணங்கள்… ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!

சென்னை, ஜமீன் பல்லாவரத்தில் குரோம் லெதர் கம்பெனிக்கு சொந்தமான 1.79 ஏக்கர் நிலம் குவெண்டி தாசன் என்ற பெயருக்கு பட்டா மாற்றம் செய்து 2019ஆம் ஆண்டு தாம்பரம் வருவாய் கோட்டாட்சியராக இருந்த ராஜகுமார் என்பவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை எதிர்த்து குரோம் லெதர் கம்பெனி தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, வருவாய் கோட்டாட்சியர் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள்
 

சென்னை, ஜமீன் பல்லாவரத்தில் குரோம் லெதர் கம்பெனிக்கு சொந்தமான 1.79 ஏக்கர் நிலம் குவெண்டி தாசன் என்ற பெயருக்கு பட்டா மாற்றம் செய்து 2019ஆம் ஆண்டு தாம்பரம் வருவாய் கோட்டாட்சியராக இருந்த ராஜகுமார் என்பவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை எதிர்த்து குரோம் லெதர் கம்பெனி தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, வருவாய் கோட்டாட்சியர் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் முன்னாள், இந்நாள் வருவாய் கோட்டாட்சியர்களை ஆஜராக உத்தரவிட்டது. அதன்படி ஆஜரான இந்நாள் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், உண்மை ஆவணங்களை தேடியும் அவை கிடைக்கவில்லை எனவும், தான் பட்டா மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்த போது ஆவணங்கள் இருந்ததாக தற்போது தர்மபுரியில் மாவட்ட சிறப்பு வருவாய் அதிகாரியாக உள்ள முன்னாள் வருவாய் கோட்டாட்சியர் ராஜகுமாரும் குறிப்பிட்டனர்.

இதையடுத்து ஆவணங்கள் மாயமானது குறித்து விசாரணை நடத்தி நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், பட்டா மாற்றம் செய்ய தாசில்தாருக்கு மட்டுமே அதிகாரம் உள்ள நிலையில், மேல் முறையீட்டு அதிகாரியான வருவாய் கோட்டாட்சியர் எப்படி பட்டா மாற்ற உத்தரவை பிறப்பித்தார் என்பது குறித்தும், தவறிழைத்த அதிகாரிகள் மீது எடுக்க உள்ள நடவடிக்கை குறித்தும் அறிக்கை அளிக்க உத்தரவிட்டு, விசாரணை அக்டோபர் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.