சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆவணப்பதிவு - புதிய நடைமுறையை அறிவித்தது பத்திரப்பதிவுத்துறை
பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகம் செல்லாமலே எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் இணையதளம் மூலம் 24x7 மணிநேரமும் ஆவணங்களை பதிவு செய்ய, வருகை இல்லா ஆவணப்பதிவு முறையை அறிமுகம் செய்துள்ளது பத்திர பதிவுத்துறை.
பொதுமக்கள் தாங்களே நேரடியாக இணையவழியே ஆவணப்பதிவு செய்யும் முறையினை தமிழக பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் எங்கிருந்து வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் இணையதளத்தின் மூலம் ஆவணங்களை பதிவு செய்துகொள்ளலாம். பதிவிற்கு சார்பதிவாளர் ஒப்புதல் அளித்ததும், அவரது கையொப்பத்துடன் சம்பந்தப்பட்ட நபரின் அலைபேசிக்கு வாட்ஸ் ஆப் மூலமும் ஆவணம் அனுப்பப்படும். ஆவணத்தை எழுதி கொடுப்பவர்கள், எழுதிப் பெறுவோர்கள் மற்றும் சாட்சிகள் ஆகிய அனைவருக்கும் ஆதார் அட்டை அப்லோடு செய்ய வேண்டும். ஆதார் ஆணையத்தின் மூலம் கைரேகை அல்லது கருவிழி படலம் வழி ஆதார் சரிபார்க்கப்பட வேண்டுமென தமிழக பத்திரப்பதிவுத்துறை கூறியுள்ளது. முதல் விற்பனை மனை, முதல் விற்பனை அபார்ட்மென்ட், தமிழ்நாடு விட்டு வசதி வாரிய விற்பனை ஆவணங்கள், வங்கி கடன் அடமானம் மற்றும் ரசீது ஆவணங்களுக்கு இது பொருந்தும். பதிவுத்துறை இணையதளத்தில் தங்களது Login தகவல்களை தாங்களே மேற்படி ஆவணங்களை (ரசீது) இணையவழியில் உருவாக்கி சமர்ப்பிக்கலாம்.