×

மருத்துவர் சாந்தா மறைவு : பிரதமர் மோடி, ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல்!

மருத்துவர் சாந்தா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை அடையாறு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவமனையின் தலைவராக இருந்தவர் மருத்துவர் சாந்தா இன்று உயிரிழந்தார். கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவ சேவையில் பணிபுரிந்த மருத்துவர் சாந்தாவுக்கு பத்ம விபூஷன் உள்ளிட்ட பல விருதுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி, சாந்தாவின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். புற்றுநோய்க்காக மேற்கொண்ட உயர்தர சிகிச்சைக்காக சாந்தா என்றும் நினைவு கூரப்படுவார். 2018 ஆம் ஆண்டில் அடையாறு
 

மருத்துவர் சாந்தா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை அடையாறு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவமனையின் தலைவராக இருந்தவர் மருத்துவர் சாந்தா இன்று உயிரிழந்தார். கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவ சேவையில் பணிபுரிந்த மருத்துவர் சாந்தாவுக்கு பத்ம விபூஷன் உள்ளிட்ட பல விருதுகள் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி, சாந்தாவின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். புற்றுநோய்க்காக மேற்கொண்ட உயர்தர சிகிச்சைக்காக சாந்தா என்றும் நினைவு கூரப்படுவார். 2018 ஆம் ஆண்டில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு சென்றதை நினைவு கூர்ந்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதேபோல் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி. சாந்தா அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்தார் என்ற செய்தி கேட்டு வேதனையுற்றேன். மருத்துவ உலகிற்குப் பேரிழப்பு!ஏழைகளும் புற்றுநோய்க்கு எளிதில் சிகிச்சை பெற அர்ப்பணிப்புடன் உழைத்தவர். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்!” என்று பதிவிட்டுள்ளார்.