×

குழந்தைக்கு பெயர் வைக்கணுமா? இனி கூகுள் வேண்டாம்! – தமிழக அரசின் புதிய இணையதளம்..!

 

குழந்​தைகளுக்கு அழகிய தமிழ்ப் பெயர்​கள், அதற்​கான பொருள் விளக்​கம் அடங்​கிய தனி இணை​யப் பக்​கம், தமிழ் இணைய கல்விக் கழகத்​தால் தொடங்​கப்​படும் என்று முதல்​வர் ஸ்டா​லின் அறி​வித்​திருந்​தார்.

அதன்​படி, www.tamildigitallibrary.tn/tamilnames என்ற பிரத்​யேக இணை​யப் பக்​கத்தை தமிழ் இணைய கல்விக் கழகம் உரு​வாக்​கி​யுள்​ளது. இதை தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜன் கடந்த 14-ம் தேதி தொடங்கி வைத்​தார்.

இதைத் தொடர்ந்​து, முதல்​வர் ஸ்டா​லின் நேற்று தனது சமூக வலை​தளப் பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: தமிழ்​நாடு தமிழ்ப் பெயர்​களால் நிறையட்​டும். நான் நடத்தி வைக்​கும் ஒவ்​வொரு திரு​மணத்​தி​லும், “பிறக்​கும் குழந்​தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்​களைச் சூட்​டுங்​கள்” என்று மணமக்​களிடம் கோரிக்கை வைப்​பேன். அதற்​கான பெயர்​களை, அதன் பொருளோடு சேர்த்து உங்​களுக்கு இப்​போது வழங்​கி​யுள்​ளோம். தொடர்ந்து புதிய பெயர்​களைப் பதிவேற்​று​வோம். நீங்​களும் பரிந்​துரைத்​துப் பங்​களிக்​கலாம். இவ்​வாறு முதல்​வர் தெரி​வித்​துள்​ளார்​.