சிவகார்த்திகேயனின் புதிய மக்கள் தொடர்பாளர் யார் தெரியுமா? – வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!
நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “எனது திரைப்பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அளித்து வரும் ஆதரவும் அன்பும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் வாக்கத்தையும் அளித்து வருகிறது.
இதுவரை எனது பத்திரிகை மற்றும் ஊடகம் சார்ந்த அனைத்துத் தகவல் தொடர்புகளும், நான் பணியாற்றும் திரைப்படங்களின் மக்கள் தொடர்பாளர்கள் (PRO) மூலமாகவே ஒருங்கிணைக்கப்பட்டு வந்துள்ளன. தற்போது எனது பல்வேறு தொழில்முறை சார்ந்த ஊடகத் தொடர்புகளை மேலும் சீராகவும், நேரடியாகவும் ஒருங்கிணைக்கும் நோக்கில், தனிப்பட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஒருவரை நியமிக்க முடிவு செய்துள்ளேன். அதன்படி பரணி அழகிரி என்பவரை எனது தனிப்பட்ட மக்கள் தொடர்பு அலுவலராக நியமித்துள்ளேன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இனி எனது பத்திரிகை மற்றும் ஊடகம் சார்ந்த அனைத்துத் தகவல் தொடர்புகளையும் அவர் ஒருங்கிணைப்பார். இதுவரை எனக்கு வழங்கி வந்த அதே அன்பையும் ஆதரவையும் ஒத்துழைப்பையும் அவருக்கும் தொடர்ந்து வழங்கிடுமாறு பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் பரணிக்கு அவர் கூறியதாவது, “எனது திரைப்பயணத்தில் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுடனான நல்லுறவு எப்போதும் முக்கியமான ஒன்றாக இருந்து வந்துள்ளது. இந்த உறவைத் தொடர்ந்து வலுப்படுத்தும் வகையில் உங்களது செயல்பாடுகள் அமையும் என நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
An important announcement: From the desk of our Sivakarthikeyan, for the press and media fraternity. @Siva_Kartikeyan @pro_barani https://t.co/IiTxBHmsOV
— Navaneethan (@navneth) November 16, 2026