இந்த ஆண்டின் 2வது மற்றும் இறுதி சூரியக் கிரகணம் - எப்போ தெரியுமா ?
இந்த ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் ஆகஸ்ட் 12, 2026 அன்று நிகழவுள்ளது. அது ஒரு முழு சூரிய கிரகணம் (Total Solar Eclipse).
பொதுவாக சூரியக் கிரகணத்தின் போது நிலவு, சூரியனை முழுமையாக மறைக்கும். ஆனால், இந்த முறை ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. நிலவு பூமிக்கு மிகத் தூரமான பாதையில் பயணிக்கும் போது இந்த கிரகணம் நிகழ்கிறது. இதனால், நிலவின் அளவு சூரியனை விடச் சிறியதாகத் தெரியும். நிலவால் சூரியனை முழுமையாக மறைக்க முடியாது. சூரியனின் மையப்பகுதியை மட்டும் நிலவு ஒரு கறுப்பு புள்ளிபோல மறைக்க, அதன் விளிம்புகள் மட்டும் பிரம்மாண்டமான நெருப்பு வளையம் போல வான்வெளியில் ஜொலிக்கும். பார்க்க ஏதோ பிரபஞ்சத்தின் நடுவே ஒரு 'நெருப்பு மோதிரம்' மிதப்பது போல ஒரு மாயாஜாலக் காட்சி அன்றைய தினம் அரங்கேறும்.
அமெரிக்க நேரப்படி ஆகஸ்ட் 12 காலை 11:34 மணிக்குத் தொடங்கி, மாலை 6:55 மணி வரை இந்த கிரகணத்தின் நிழல் உலகை வலம் வரப் போகிறது. பூமியின் மிகக் குறிப்பிட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு மட்டுமே இந்தக் காட்சி லைவ்-ஆகத் தெரியப்போகிறது. ஐரோப்பா (வடக்கு ஸ்பெயின்), கனடா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, வடகிழக்கு ரஷ்யா, அட்லாண்டிக் பெருங்கடல் பகுதிகளில் இருந்து பார்க்கலாம்.
இந்திய வான் ஆர்வலர்களுக்கு சின்ன பேட் நியூஸ். இந்த நெருப்பு வளைய கிரகணம் நிகழும் ஒட்டுமொத்த நேரமும் இந்தியத் துணைக் கண்டத்தில் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரமாக (இரவு 9:04 மணி முதல் அதிகாலை 4:25 மணி வரை) இருக்கும். எனவே, இந்தியாவில் இது முற்றிலும் தெரியாது. இந்தியாவில் கிரகணம் தெரியாது என்பதால், நமது பாரம்பரிய ஜோதிட விதிகளின்படி, கிரகணத்தின் போது கடைப்பிடிக்கப்படும் 'சூதக் காலம்' போன்ற எந்தக் கட்டுப்பாடுகளும் இந்த முறை இந்தியாவிற்குப் பொருந்தாது.