இது தெரியுமா ? வீட்டில் சண்டை சச்சரவுகள் நீங்க, வன்னி மர குச்சிகளை எடுத்து...
Nov 27, 2025, 06:00 IST
மரங்களும், பிரச்சனைகளுக்கான தீர்வும் :
- வீட்டில் உள்ள தீய சக்திகள் விலக அரச மரத்தடி மண்ணை எடுத்து, அதனை துணியில் முடிந்து நிலை வாசலில் கட்டி தொங்க விடலாம்.
- வீட்டில் சண்டை சச்சரவுகள் நீங்க, வன்னி மர குச்சிகளை எடுத்து நிலை வாசலில் வைத்தால் சண்டைகள் வராது.
- வெள்ளிக்கிழளை தட்டில் மருதாணி இலைகளை பரப்பி அதற்கு மேல் அகல் விளக்கில் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் மகாலட்சுமி தாயார் வீட்டில் தங்குவாள்.
- வீட்டு வாசலுக்கு நேராக மா மரம் மற்றும் முருங்கை மரம் நட்டு வைத்து வளர்ப்பது வீட்டிற்கு தீங்கு விளைவிக்கும்.
- கண் திருஷ்டிகள் நீங்குவதற்கு வீட்டில் சாம்பிராணி புகை போடும் போது மருதாணி விதைகளை போட்டு தூபம் போடலாம். இதனால் தீய சக்திகள் நீங்கி, லட்சுமி கடாட்சம் ஏற்படும்.
- வறுமை நீங்கி பொருளாதாரத்தில் சிறந்து விளங்க வீட்டிற்கு முன்பாக வெற்றிலை கொடியை நட்பு வைத்து வளர்க்கலாம்.
- வேப்பமரம் நட்டு வைத்த பிறகு அது நன்றாக வளராமல் அதனை வெட்டக் கூடாது. மீறி வெட்டினால் வீட்டில் சந்தோஷம் கெட்டுப் போய்விடும்.
- ஒற்றை பனைமரம் உள்ள இடத்தில் வீடு கட்டுவது கூடாது.
- நல்ல வேலை கிடைப்பதற்கு விநாயகருக்கு கற்பூரவள்ளி இலையில் மாலை தொடுத்து போட்டு வழிபடலாம்.
- புதன்கிழமை அன்று அரச மரத்தை சுற்றி வழிபட்டால் தொழில், வியாபாரம் பெருகும்.
- வறுமைகள் நீங்க, வன்னி மர குச்சிகளை வீட்டிற்கு முன்பு புதைத்து வைக்கலாம்.
- முக்கியமான காரியத்திற்காக வெளியே செல்லும் போது திருநீற்றுப்ச்சிலையை கையில் வைத்துக் கொண்டு சென்றால் காரிய வெற்றி உண்டாகும்.
- மகாவிஷ்ணுவிற்கு செம்பருத்தி பூக்களால் அலங்காரம் செய்து வழிபடவே கூடாது.
- திங்கட்கிழமை அன்று அரச மரத்தை சுற்றி வந்தால் பல நல்ல விஷயங்கள் உங்களை தேடி வரும்.
- செவ்வாய்கிழமை அரச மரத்தை சுற்றி வந்தால் தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும்.