☰
×

சமையலறையில் உள்ள இந்த பொருள் செய்யும் ஆரோக்கிய அற்புதங்கள் என்ன தெரியுமா?

 

கிராம்புகளை உபயோகிப்பது வாயில் இருக்கும் பாக்டீரியாக்களை 70 விழுக்காடு குறைக்கிறது. அதே நேரத்தில், கிராம்பு எண்ணெய் பொதுவாக ஈறு தொற்றுக்கு காரணமான பீரியண்டால்ட் நோய்க்கிருமிகள் போன்ற பாக்டீரியாக்களிலிருந்து பாதுகாக்கும் திறன் கொண்டது. கிராம்பு எண்ணெய்யில் யூஜெனால் என்ற உறுப்பு உள்ளது. இது பற்கள், ஈறுகளில் வலியைக் அதிகரிக்க உதவுகிறது. மேலும், கிராம்புப் பற்களை பிளேக், கேரிஸிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

சுவாசப் பாதையைச் சீராக்கும் கிராம்பு - சளி, இருமலைக் குறைக்க உதவுகிறது. ஆயுர்வேதத்தில், சளி, பிற நோய்த்தொற்றுகளின் அறிகுறிகளைப் போக்க கிராம்பு பயன்படுத்தப்படுகிறது. மேலும் கிராம்பு சைனசிடிஸ், ஆஸ்துமா போன்ற பல சுவாசப் பிரச்சினைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.

கிராம்பு, செரிமான அமைப்புக்கு நல்லது என்று கருதப்படுகிறது. அடிப்படையில், கிராம்பு நொதிகளைத் தூண்டுகிறது. இது நமது செரிமானம், குடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்கிறது. கிராம்பு சரியான அளவில் உட்கொள்வது வீக்கம், அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வாயு, பசியின்மை போன்ற பிரச்சினைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.

கிராம்புகளில் உள்ள யூஜெனால் உடல், தோல் தொடர்பான பல பிரச்சினைகளிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. முகப்பருவுக்குக்கூட, கிராம்புகளின் வெளிப்புறப் பயன்பாடும் நன்மை பயக்கும்.

தலைவலி, ஒற்றைத் தலைவலிக்கும் இது பயனுள்ளதாக இருக்கும். கிராம்பு எண்ணெய்யின் வாசனை தலை வலியிலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது.

ஆயுர்வேதத்தில், ஆண்களுக்குப் பாலியல் உடல்நலப் பிரச்சினைகளுக்கு உதவும் பல மருந்துகளில் கிராம்பு பயன்படுத்தப்படுகிறது. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், கிராம்புகளை அளவாகப் பயன்படுத்துவது டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரிக்கிறது என்று தெரியவந்துள்ளது. இருப்பினும், மறுபுறம், அதிகப்படியான பயன்பாடு அதன் உற்பத்தியைக் குறைக்கும்.

கிராம்பு அளவில் சிறியதாக இருந்தாலும், அதனுடைய வீரியம் அதிகமாக உள்ளதால், மனித உடலுக்குப் பல்வேறு பயன்களை அளிக்கிறது. இதை தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால், பல்வேறு உடல் உபாதைகளைத் தீர்க்கலாம்.

கிராம்பில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் (Antioxidants) மற்றும் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளன. இவை உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, பருவகாலத் தொற்று நோய்கள் அண்டாமல் பாதுகாக்கின்றன.

கிராம்பில் உள்ள 'நைஜெரிசின்' (Nigericin) என்ற கூறு, ரத்தத்திலிருந்து சர்க்கரையைச் செல்கள் உறிஞ்சுவதை மேம்படுத்தி, இன்சுலின் செயல்பாட்டைச் சீராக்க உதவுகிறது. இதனால் சர்க்கரை நோயாளிகளுக்கு இது பயனுள்ளதாகக் கருதப்படுகிறது.

கிராம்பில் உள்ள யூஜெனால், கல்லீரலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், கல்லீரல் செல்கள் சேதமடைவதைத் தடுத்து அதன் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது.

 கிராம்பில் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான மாங்கனீசு (Manganese) என்ற தாதுச்சத்து நிறைந்துள்ளது. இது எலும்புகளின் அடர்த்தியைப் பராமரிக்கவும், எலும்புத் தேய்மானத்தைத் தடுக்கவும் துணைபுரிகிறது.

வயிற்றில் சுரக்கும் அமிலத்தன்மையைச் சமநிலைப்படுத்தி, வயிற்றின் உட்புறச் சுவரைப் பாதுகாக்கும் சளியின் (Mucus) உற்பத்தியை அதிகரிக்கக் கிராம்பு உதவுகிறது; இதன் மூலம் அல்சர் எனப்படும் வயிற்றுப் புண்கள் ஏற்படும் அபாயம் குறைகிறது.