ஆகஸ்ட் மாத வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா ?
ஆகஸ்ட் மாதத்தில் சில நாட்களில் வங்கிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. மாதத்தின் 2ஆவது மற்றும 4 ஆவது சனிக்கிழமைக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் ஆகஸ்ட் 9 மற்றும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வங்கி விடுப்பில் இருக்கும்.
ஞாயிற்றுக் கிழமைகளான ஆகஸ்ட் 3,10,17, 24 மற்றும் 31 ஆகிய நாட்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். சிறப்பு விடுமுறை நாட்களை பொருத்தளவில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெள்ளியன்று சிக்கிம் மாநிலத்தில் மட்டும் விடுமுறை வழங்கப்படுகிறது.
ஆகஸ்ட் 3 - திரிபுரா: கெர் பூஜை காரணமாக திரிபுராவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ஆகஸ்ட் 9 - மத்திய இந்தியா: நாடு முழுவதும் ரக்ஷாபந்தன் பண்டிகை இந்த நாளில் கொண்டாடப்படும். இதன் காரணமாக, மத்திய இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து தனியார் மற்றும் அரசு வங்கிகளும் மூடப்பட்டிருக்கும்.. இவற்றில் உத்தரகண்ட், உத்தரபிரதேசம், ஹரியானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் போன்றவை அடங்கும்.
ஆகஸ்ட் 12 செவ்வாய் அன்று ரக்சா பந்தனை முன்னிட்டு ராஜஸ்தான், உத்தரகாண்ட் உள்ளிட்ட சில வட மாநிலங்களில் விடுமுறை அளிக்கப்படும்.
ஆகஸ்ட் 13: தேசபக்தி திவாஸ் காரணமாக மணிப்பூரில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு வங்கிகள் நாடு முழுவதும் வெள்ளியன்று மூடப்பட்டிருக்கும். ஆகஸ்ட் 16 ஆம் தேதி குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் பார்சி புத்தாண்டையொட்டி விடுமுறை வழங்கப்படலாம்.
ஆகஸ்ட் 26 செவ்வாய் அன்று, கிருஷ்ணரின் பிறந்த நாளான ஜன்மாஷ்டமியை முன்னிட்டு டெல்லி, பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் விடுமுறை அளிக்கப்படலாம்.
ஆகஸ்ட் 27: விநாயகர் சதுர்த்தி காரணமாக ஆந்திரா, கோவா, குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப், ஒடிசா, சிக்கிம், தமிழ்நாடு மற்றும் தெலுங்கானாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.