☰
×

இந்த நான்கு கேள்விகளுக்கு பதிலுண்டா? மு.க.ஸ்டாலின் சாடல்!

 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது x பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், "CM சார்.. நாடு சிரிக்கும் நான்கு மாதங்கள்! இந்த நான்கு கேள்விகளுக்குப் பதிலுண்டா?

1. பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியோரைச் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் மாவட்டச் செயலாளர்களாகவும் வைத்துக்கொண்டு முதலமைச்சர் பெண் பாதுகாவலர் போல வேடம் போடலாமா?

2. அறிவிக்கப்படாத மின்வெட்டில் இருந்து, இனி தினமும் அறிவித்துவிட்டு 8 மணிநேரம் மின்வெட்டு என்பதை நோக்கித் தமிழ்நாடு நகரவுள்ளதாக வரும் செய்திகள் உங்கள் செவிகளை எட்டவில்லையா?

3. அசையாத மரமொன்று விழுந்தது கீழே என்ற கதையாக, இடைத்தேர்தல் தோல்வியைத் தவிர்க்க நீங்கள் மணிக்கணக்கில் தெருவலம் போவது போதாமல், டிபன் கேரியரில் பணமும் போகிறதாமே? ஒரு தெருவுக்கு இவ்வளவு என வாக்குகள் விலைபேசப்படுவதாக உங்கள் ஆட்சி அமைய ஆதரவு தெரிவித்த கட்சிகளே குற்றம்சாட்டுவதற்குப் பதில் என்ன?

4. இத்தோடு, குதிரைவேக குதிரை பேரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? அல்லது, இனியும் TVK Horse Trading-இன் அடுத்த Season தொடருமா? தூயசக்தி எனத் தம்பட்டம் அடித்த உங்களது ரீல் இப்படி நான்கே மாதங்களில் அறுந்து தொங்கிவிட்டதே!" என்று கேள்விகளை எழுப்பியிருக்கிறார்

முன்னதாக நேற்று மதுராந்தகத்தில் பிரச்சாரம் செய்த ஸ்டாலின், "5 நிமிஷம் பிரச்சாரம் செய்ததற்கே கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றுவிட்டார் என்று நக்கல் பேச்சு பேசுகிறீர்களே! நான் கேட்கிறேன்.. கரூரில் போய் பாட்டெல்லாம் பாடினீர்களே! ஏன் அங்கு ஜெயிக்கவில்லை? விழுப்புரத்தில் மாநாடெல்லாம் போட்டீர்களே! ஏன் அங்கு ஜெயிக்கவில்லை? கன்னியாகுமரி போனீர்களே! அங்கு ஒரு சீட் கூட வாங்கலையே! திருவாரூர் போய்.. பொய் பொய்யாக பேசினீர்களே! அங்கு என்ன ஆச்சு? உண்மை என்னவெனில், விஜய் நீண்ட நேரம் பரப்புரை செய்த தொகுதிகளில் தவெக படுதோல்வி அடைந்தது. இதுதான் யதார்த்தம். மதுராந்தகமும் இந்த லிஸ்ட்டில் சேர வேண்டும்." என்று பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.