"ரேஷன் கார்டு வச்சிருக்கீங்களா?" – மீண்டும் கிலோ ₹35-க்கு வெங்காயம்... தமிழக அரசின் மாஸ் அறிவிப்பு!
தமிழகத்தில் சமீப காலமாக, வெங்காயம் விலை உயர்ந்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களுக்கு நியாயமான விலையில் வெங்காயம் கிடைக்கவும், கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகளில், வெங்காயம் விற்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏற்கனவே இரண்டு கட்டமாக, வெங்காயம் விற்பனை செய்யப்பட்ட நிலையில், மூன்றாம் கட்ட விற்பனை, சென்னையில் நேற்று முன்தினமும், மற்ற மாவட்டங்களில் நேற்றும் தொடங்கியது.
ரேஷன் கடை மற்றும் கூட்டுறவு அங்காடிகளில், ஒரு குடும்ப அட்டைக்கு, ஒரு கிலோ வெங்காயம், 35 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.
இதற்காக, தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திடம் இருந்து, 700 டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. வெங்காயம் விற்பனை தொடர்பான புகார்கள் மற்றும் குறைகளை, பொதுமக்கள் 96005 61969 என்ற, 'வாட்ஸாப்' எண்ணில் தெரி விக்கலாம் என, கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.