தங்கம் வாங்கும் பிளான் இருக்கா? 2 நாளில் ரூ.520 உயர்வு...!!
அமெரிக்க டாலர் மதிப்பிழப்பு, கச்சா எண்ணெய் விலை உயர்வு, போர் பதற்றம் போன்ற பல்வேறு காரணிகள் தங்கம் விலையின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அவ்வபோது விலை சற்று உயர்ந்தாலும் பெரும்பாலும் தங்கம் விலையானது சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இதனால் வரும் நாட்களில் இன்னும் விலை குறைந்து ஒரு சவரன் ரூ. 1 லட்சத்தும் கீழே செல்ல வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே தங்கத்தின் மீது முதலீடு செய்ய நினைப்போருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையப்பெறலாம் என்கின்றனர்.
நேற்று (அக்டோபர் 26) தங்கம் 1 கிராம் ரூ.15 உயர்ந்து ரூ.13,085-க்கும், ஒரு சவரன் ரூ.120 உயர்ந்து ரூ.1,04,680-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை மாற்றமின்றி 1 கிராம் ரூ.220-க்கு விற்பனையானது.
இன்று (அக்டோபர் 27) ஆபரணத் தங்கத்தின் விலை மளமளவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.50 உயர்ந்து ரூ.13,135-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.400 உயர்ந்து, ரூ.1,05,080-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை இன்றும் மாற்றமின்றி 1 கிராம் ரூ.220-க்கும், 1 கிலோ பார் வெள்ளி ரூ.2,20,000-க்கும் விற்பனையாகிறது.
நேற்று தங்கத்தின் விலை உயர்ந்த சூழலில், இன்று மீண்டும் விலை உயர்ந்திருப்பது இல்லத்தரசிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 2 நாட்களில் சவரனுக்கு ரூ.520 வரை உயர்ந்துள்ளது.