"காலையில் வெறும் வயிற்றில் டீ குடிக்கிறவரா நீங்கள்?" – உங்களுக்கும் இந்த ஆபத்து காத்திருக்கு!
வெறும் வயிற்றில் சுடச்சுட டீ அருந்தும் பழக்கம் பலரிடம் உள்ள நிலையில், அது செரிமான மண்டலத்தை பாதித்து அமிலத்தன்மையை அதிகரிக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். டீ-யில் உள்ள காஃபின் மற்றும் டானின் சத்துக்கள் வயிற்றின் உட்புற படலத்தை எரிச்சலடைய செய்து, பசியின்மையையும் இரைப்பை அழற்சியையும் உண்டாக்க வாய்ப்புள்ளது. எனவே, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீரையோ அல்லது லேசான சிற்றுண்டியையோ சாப்பிட்ட பிறகு டீ அருந்துவதே சிறந்தது.
தேநீர்
வெறும் வயிற்றில் பால் கலந்த தேநீர் குடிப்பதால் வயிற்றில் எரிச்சல் உண்டாகும். இதனால் டானின்கள் மற்றும் காஃபின் காரணமாக குமட்டல் ஏற்படும். அதுமட்டுமில்லாமல் வழக்கமான பால் கலந்த தேநீர் உட்கொள்வது காஃபின் சார்ந்து தலைவலி அல்லது எரிச்சலை உண்டாக்கும்.
பொதுவாகப் பால் கலந்த டி கார்டிசோலிங் சோலின் அளவை உயர்த்தி மன அழுத்தம் பதற்றம் அல்லது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும். மேலும் தேயிலையின் டானின்கள் இரும்புடன் பிணைந்து காலையில் உட்கொள்ளும் போது அதன் உறிஞ்சுதலைக் குறைக்கிறது.
காரணங்கள்
இப்படி தேநீரைத் தொடர்ந்து உட்கொள்வதால் சர்க்கரை மற்றும் முழு கொழுப்பு உள்ள பாலை சேர்ப்பது எடையை அதிகரிக்க ஊக்குவிக்கும். குறிப்பாக இவை காலையில் தேநீரை உட்கொள்ளும் போது நிகழும்.
மேலும் வெறும் வயிற்றில் பால் கலந்த டீ குடிப்பது செரிமான புறணியை எரிச்சல் அடையச் செய்வது அமிலத்தன்மை அல்லது வீக்கத்திற்கு வழிவகுக்கும். இங்கே குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான தகவல்கள் மட்டுமே மற்றும் தகுதியான மருத்துவர்கள் கருத்துக்கு எந்த வகையிலும் மாறாக இல்லை
வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் ஏற்படும் 7 தீமைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. அமிலத்தன்மை மற்றும் வாயு பிரச்சனை
வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் அதில் உள்ள காஃபின் வயிற்றில் அமிலத் தன்மையை அதிகரிப்பதன் மூலம் இரைப்பை எரிச்சல் மற்றும் வாயு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால் வெறும் வயிற்றில் தேநீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
2. செரிமான அமைப்பு பாதிப்பு
டீயில் டானின்கள் எனப்படும் ஒரு தனிமம் உள்ளதால் இதை வெறும் வயிற்றில் பருகும் போது இது செரிமான அமைப்புக்கு தீங்கு விளைவித்து வயிற்று சுவர்களை சேதப்படுத்துகிறது.
3. இரத்த சர்க்கரை அளவு
வெறும் வயிற்றில் டீ குடிப்பது திடீரென இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ வழிவகுத்து நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் இதனை தவிர்க்க வேண்டும்.
Advertisement
4. ஹார்மோன் சமநிலையின்மை
தேநீரில் உள்ள காஃபின் பெண்களுக்கு அதிகமாக ஹார்மோன் சமநிலையை சீர்குலைத்து மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் தைராய்டு அபாயத்தை அதிகரிக்கும் என்பதால் வெறும் வயிற்றில் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
5. நீரிழப்பு
டீயில் உள்ள டையூரிடிக் பண்புகள் உடலில் இருந்து நீரின் அளவைக் குறைத்து நீர் இழப்புக்கு வழி வகுப்பதால் தேநீரை காலையில் தவிர்க்க வேண்டும்.
6. வாய் துர்நாற்றம்
வெறும் வயிற்றில் டீ குடிப்பது வாயில் அமிலத்தை அதிகரித்து, வாய் துர்நாற்றத்தையும் பற்களில் தகடு உருவாவதையும் ஏற்படுத்தி பல் சொத்தை மற்றும் ஈறு பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும்.
7. மன ஆரோக்கியம்
வெறும் வயிற்றில் டீ குடிப்பது உடலில் காஃபின் அளவு அதிகரித்து தூக்கமின்மை, அமைதியின்மை மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதால் வெறும் வயிற்றில் தேநீர் குடிப்பதைத் தவிர்க்கவும்.
என்ன செய்ய வேண்டும்?
* காலையில் எழுந்தவுடன், முதலில் வெதுவெதுப்பான நீர் அல்லது எலுமிச்சை சாறு குடிக்கவும்.
* டீ குடிக்க வேண்டிய அவசியம் இருந்தால், தேநீருடன் லேசான பிஸ்கட் அல்லது உலர் பழங்கள் சாப்பிடுங்கள்.