☰
×

ஏற்காட்டிற்கு சுற்றுலா வர வேண்டாம்- மாவட்ட ஆட்சியர்

 

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் கனமழை காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருவதைத் தவிர்க்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மிக கனமழை பெய்து வருவதால் ஏற்காடு மலைப்பகுதிக்கு வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். உள்ளூர் மக்கள் மழை பெய்யும்போது வாகனங்களில் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். கனமழை எச்சரிக்கை காரணமாக சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.   இதனால் ஏற்காட்டுக்கு செல்லும் வாகனங்கள் அடிவாரத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறது.

இதேபோல் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு 4வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.