நீரிணை வழியே செல்லும் கப்பல்களில் இந்திய மாலுமிகளை நியமிக்க வேண்டாம் - மத்திய அரசு உத்தரவு
Jul 16, 2026, 18:14 IST
ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்துவதை உடனடியாக நிறுத்துமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சர்வதேச அளவில் மிகவும் பரபரப்பான கடல் வழித்தடமான ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்களில், இந்திய மாலுமிகளைப் பணியமர்த்த வேண்டாம் என்று கப்பல் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.மறு உத்தரவு வரும் வரை பணியமர்த்துவதை நிறுத்த கப்பல் உரிமையாளர்கள், மேலாளர்கள் மற்றும் ஆட்சேர்ப்பு முகாம்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்திய கடல்சார் நிர்வாக இயக்குநரகம் இந்த முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.