×

திமுக முப்பெரும் விழா.. புதிய தேதி அறிவிப்பு..!

 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செப்டம்பர் 15 அன்று நடைபெறவிருந்து ஒத்திவைக்கப்பட்ட 'திமுக முப்பெரும் விழா', வரும் செப்டம்பர் 19 அன்று மாலை 5.00 மணியளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள "கலைஞர் அரங்கில்" இந்நிகழ்வு பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகப் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது...

ஆண்டுதோறும் தி.மு.க., சார்பில் கொண்டாடப்படும் முப்பெரும் விழா, கடந்த செப்டம்பர் 15ம் தேதி, சென்னையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. பிறகு கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டதால் முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.

இந்நிலையில் இன்று (செப் 17) திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கடந்த 15ம் தேதி நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டு, தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவித்ததையொட்டி, தற்போது திமுக முப்பெரும் விழா வரும் 19ம் தேதி (சனிக்கிழமை) அன்று மாலை 5.00 மணியளவில், அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.