×

திமுக ஜென் z செயற்பாட்டாளர் கைது ரத்து..!  ஜூலி மற்றும் தி.மு.க GenZ குழுவினர் செய்த ஆக்‌ஷன்ஸ்..!

தி.மு.க ஜென் z செயற்பாட்டாளர் சரண் ஜெயராமன் கைதை ரத்து செய்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

தாம்பரத்தைச் சேர்ந்தவர் சரண் ஜெயராமன். இவர் திமுக ஆதரவாளர். திமுகவின் ஜென் Z செயற்பாட்டாளராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் இவர் தவெக பெண் நிர்வாகிகளை விமர்சித்ததாக கடந்த 4 நாட்களுக்கு முன்பு அவர் மீது பெண் நிர்வாகிகள் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு அவரது வீட்டின் மாடியில் வைத்து கொளத்தூர் போலீஸார் சரணை கைது செய்தனர். இதையடுத்து அவரை இன்று மாலை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து சென்றனர். அப்போது நீதிபதி முன்பு ஆஜர்படுத்திய போது அவரது கைதை நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டார்.

சரண் ஜெயராமன் கைதுக்கு திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் பின் அவரை போலீசார் விடுவித்தனர் மேலும் அவர்கள் வெளியில் வந்தபின் நீதிமன்ற வளாகத்தில் ஜூலி மற்றும்  தி.மு.க GenZ குழுவினர் செய்த ஆக்‌ஷன்ஸ் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது 

த.வெ.க பெண்களை இன்ஸ்டாவில் இழிவு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தி.மு.க GenZ செயற்பாட்டாளர் சரன் ஜெயராமின் கைதை ஏற்க மறுத்து சொந்த ஜாமீனில் விடுவித்த எழும்பூர் நீதிமன்ற நீதிபதி… வெளியில் வந்தபின் நீதிமன்ற வளாகத்தில் ஜூலி மற்றும் தி.மு.க GenZ குழுவினர் செய்த ஆக்‌ஷன்ஸ்..!… pic.twitter.com/LlZVr6j1NY

— Polimer News (@polimernews) July 4, 2026