×

“இனி இவரு அண்ணா அறிவாலயம் பக்கவே வரக்கூடாது”- சிதம்பரத்திடம் எச்சரித்த திமுக

 

காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை குழு தலைவர் இனி அண்ணா அறிவாலயம் வருவதற்கோ தமிழ்நாடு முதலமைச்சரை சந்திப்பதற்கோ அனுமதியில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்திடம் திமுக சொல்லி அனுப்பி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவா காங்கிரஸ் தலைவர் & முக்கிய பொறுப்பில் இருந்தவர் கிரீஷ் ஜோடங்கர். கிரீஷ் ஜோடங்கர் காங்கிரஸ் தலைமையிடம் தெரிவித்து, தன்னை கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவிலிருந்து விடுவித்து வேறு ஒருவரை நியமிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மற்ற மாநிலங்களில் பிற கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசுவது போல திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியவில்லை. முழுக்க முழுக்க Data அடிப்படையிலும், மிகக் கராராகவும், நக்கலுடன் பேசப்படுவதால் அவர்களை எளிதில் சமாளிக்க முடியவில்லை. எனவே, இனிமேலும் இப்படியான பேச்சுவார்த்தைகளில் தானாக கலந்து கொள்வது சிரமமாக இருக்கும் என கிரீஷ் ஜோடங்கர் காங்கிரஸ் தலைமையிடம் தெரிவித்து, தன்னை கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவிலிருந்து விடுவித்து வேறு ஒருவரை நியமிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுத்தால்தான் திமுகவுடன் கூட்டணி, தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது என்றெல்லாம் கிரீஷ் ஜோடங்கர் செய்தியாளர்களிடம் எக்குதப்பாக பேட்டியளித்து இருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை குழு தலைவர் இனி அண்ணா அறிவாலயம் வருவதற்கோ தமிழ்நாடு முதலமைச்சரை சந்திப்பதற்கோ அனுமதியில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்திடம் திமுக சொல்லி அனுப்பி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.