×

“வெல்லும் தமிழ் பெண்கள்”- மாநாட்டில் கலந்துகொள்வோருக்கு ஹாட் பாக்சில் சுடச்சுட பிரியாணி

 

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில்  வெல்லும் தமிழ் பெண்கள் எனும் தலைப்பில்  தஞ்சை உள்ளிட்ட  டெல்டா மண்டல தி.மு.க மகளிர் மாநாட்டுக்கு  பெண்கள்  தன்னெழுச்சியாக சாரை சாரையாக வந்து கொண்டுருக்கின்றனர். ஒன்னேகால் லட்சம் பெண்கள் பங்கேற்கும்  மாநாட்டிற்கு பெண்கள் கருப்பு சிகப்பு வண்ணத்தில் புடவை அணிந்து வந்துள்ளனர்.

தஞ்சை ,  திருவாரூர், நாகை, மயிலாடுதுறை  உள்ளிட்ட பதினைந்து டெல்டா மாவட்டங்களின் 43 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த 1.25 லட்சம் திமுக மகளிர் அணியினர் கலந்து கொள்ள உள்ளனர். இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி  உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளனர். இதற்காக 200 ஏக்கர் பரப்பளவில் மாநாடு பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்றுள்ளது. இதில் 100 ஏக்கரில் மாநாட்டு பந்தலும், 100 ஏக்கரில் வாகனம் நிறுத்த இடங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சுமார் 5,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

மேலும் மகளிர் வந்து செல்லும் வகையில் அவர்களுக்கு தேவையான உணவு குடிதண்ணீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெண்களுக்கும்  ஹாட் பாக்கில் சுடச் சுடச் பிரியாணி வழங்கப்பட்டது. இன்னும் சில நிமிடங்களில் மகளிர் மாநாடு துவங்க உள்ளது.